"ஸ்லோ பாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொன்ற சசிகலா குடும்பத்தினர்"

தொடர்ந்து, 8 மாதமாக ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 20

தொடர்ந்து, 8 மாதமாக ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள, பெரியார் தூண் அருகே நேற்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லேசாக சர்க்கரை இருந்தது. அதனால், அவரது கையிலும் கால்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. உடலில் கொப்புளம் ஏற்பட்டால், ஆயின்மென்ட் போட்டால்போதும் சரியாகிவிடும். ஆனால், ஸ்டீராய்டு என்று சொல்லக்கூடிய மெல்லக் கொல்லும் விஷ ஊசி தொடர்ந்து போட்டிருக்கிறார்கள். எமர்ஜென்சி மெடிஸின் மாதிரி ஒரு வருடத்துக்கு நான்கைந்து முறை அந்த மருந்துகளைப் போடலாம். ஆனால், தொடர்ந்து எட்டு மாத காலம் ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு ஊசிகளைப் போட்டதால், சர்க்கரை அளவு 560 வரை அதிகரித்தது. அதை, சசிகலா குடும்பத்தினர் வெளியில் சொல்லவில்லை.

அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அனுமதித்த பிறகுதான், மருத்துவர்கள் போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட சிகிச்சையைப் பார்த்த பிறகு தெரியவந்தது. ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து போடக்கூடாது. அப்படிப் போட்டால், அது சர்க்கரை அளவைக் கூட்டிவிடும். தொற்றைப் பரப்பிவிடும். உயிரைக் கொன்றுவிடும் என்பதெல்லாம் ஒரு சாதாரண செவிலியருக்குக்கூட தெரியும்.  தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்து செலுத்துவதன் காரணமாக, அந்தத் தொற்று சீராக ரத்தத்திலும் நுரையீரலிலும், இதயத்திலும் கலக்கிறது. ஸ்லோ பாய்சன் என்ற முறையில் எட்டு மாதகாலமாக முயற்சி செய்து ஜெயலலிதாவை தீர்த்துக்கட்டிவிட்டார்கள். இதை விசாரிக்க வேண்டியது நீதி விசாரணைக் ஆணையத்தின் கட்டாயப் பணி என்று நாங்கள் சொல்கிறோம். இவ்வாறு கூறினார்.

ஜெயலலிதாவின் மரணம் அடைந்தபிறகு, அவர் இயற்கை மரணம் அடைந்தாரா..? அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா..? எனப் பல்வேறு சந்தேகங்கள் à®….தி.மு.க. தொண்டர்கள் மற்றும்  தமிழக மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் இவ்வாறு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...